Published : 07 Nov 2020 06:59 PM
Last Updated : 07 Nov 2020 06:59 PM

பிஹார் தேர்தலில் இழுபறி நிலை?- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்கள் வெல்ல வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்பு  தகவல்

தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதிஷ் குமார்- கோப்புப் படம்

புதுடெல்லி

டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது.

71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 78 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 3-ம் கட்டத் தேர்தலில் 51.4 சதவீத வாக்குகள் பதிவானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலையொட்டி பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா சமீபத்தில் வெளியேறியது.

இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா தளமும் (ஆர்எல்எஸ்பி) வெளியேறி விட்டது. அதேபோல் பாஜக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியும் வெளியேறியுள்ளது.

பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுடன் அவாம் மோர்ச்சா போட்டியிடுகிறது. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில்தான் போட்டியிடும் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. எல்ஜேபி, நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட மறுத்து விட்டது.

அதேபோல் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளது.

தேவேந்திர பிரசாத் யாதவின் சமாஜ்வாடி ஜனதாதளக் கட்சி, ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகியவை 3-வது அணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


பிஹார் தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்த நிலையில் இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணி 120 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக கூட்டணி 116 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிகிறது.

ஜன்கி பாத் எக்ஸிட் போல்:

பாஜக கூட்டணி: 91-117

காங்கிரஸ் கூட்டணி-118-138

லோக் ஜனசக்தி-5-8

பிறக் கட்சிகள்-3-6


இந்தியா டிவி கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி: 112
பாஜக: 70
ஐக்கிய ஜனதாதளம்: 42
---
காங்கிரஸ் கூட்டணி: 110
ராஷ்ட்ரீய ஜனதாதளம்: 85
காங்கிரஸ் 25


ஏபிபி நியூஸ் கருத்துக் கணிப்பு

பாஜக கூட்டணி: 104-128

காங்கிரஸ் கூட்டணி-108-131

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x