Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM
ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட 3 நாட்கள் ஆன நிலையில் (2-ம் தேதி) 200 ஆசிரியர்கள் மற்றும் 15 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கரோனா தொற்று குறைந்ததால், பள்ளி, கல்லூரிகளை நிபந்தனைகளுடன் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியது. இதனால் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூனியர் கல்லூரிகளும் 2-ம் தேதி திறக்கப்பட்டன. இதில் சுமார் 80 சதவீத மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட விதி முறைகளை ஆசிரியர்களும் மாணவர்களும் பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சித்தூர், பிர காசம், குண்டூர், கோதாவரி ஆகிய மாவட்டங்களில் பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு மாவட்ட கல்வித் துறை சார்பில் கடந்த 3 நாட்களாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுபோல் சித்தூர், பிரகாசம், மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் மாணவ, மாணவியருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிகரிக்கும்
இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் முழுமையாக பரிசோதனை செய்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து சித்தூர் மாவட்டத்தில் வரும் 8-ம் தேதிக்குள் ஆசிரியர் கள் அனைவரும் கரோனா பரி சோதனை செய்துகொண்டு அதற் கான சான்றிதழுடன் பள்ளிக்கு வரவேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதனால் பல ஆசியர்கள் நேற்று வரிசையில் காத்திருந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சம் அடைந் துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை மேலும் தள்ளிப் போட வேண்டும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT