Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

ம.பி. தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக காங்கிரஸுக்கு வாக்கு கேட்ட சிந்தியா

போபால்

மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி குவாலியர் மாவட்டம் தப்ரா நகரில் பாஜக வேட்பாளர் இமர்தி தேவியை ஆதரித்து கட்சியின் மாநிலங்களவை எம்.பி.ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது ஓரிடத்தில் அவர், “எனதருமை மக்களே வரும் 3-ம் தேதி நடைபெறும் தேர்தலில் கை சின்னத்துக்கு எதிரான பொத்தானை நீங்கள் அழுத்த வேண்டும்” என்றார். என்றாலும் உடனே சுதாரித்த அவர், “தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” என திருத்திக் கூறினார்.

இதனை கிண்டல் செய்யும் வகையில் மாநில காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பதிவில், “சிந்தியாஜி, வரும் 3-ம் தேதி மத்தியபிரதேச மக்கள் நீங்கள் கூறியபடி காங்கிரஸ் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள்” என கூறப்பட்டுள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியா தவறுதலாக கூறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் பரவியது. இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x