Published : 01 Nov 2020 01:44 PM
Last Updated : 01 Nov 2020 01:44 PM

‘‘இரண்டு இளவரசர்கள்’’ - ராகுல் காந்தி, தேஜஸ்வி மீது பிரதமர் மோடி கடும் சாடல்

பாட்னா

பிஹாரில் தற்போது இரண்டு இளவரசர்கள் சேர்ந்துள்ளனர், அவர்களில் ஒருவர் காட்டு தர்பாரில் இருந்து வந்தவர் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

பிஹாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28,நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகியதேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள அடுத்தக் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு நிறைவடைகிறது. இதையொட்டி பிஹாரில் உள்ள அரசியல் கட்சிகள் மும்முரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பிஹாரில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று சாப்ரா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். பிரதமர் மோடியுடன் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் உடனிருந்தார். கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சாத் பூஜை வரை ஏழைகளுக்கு இலவச தானியங்கள் வழங்குவதை உறுதி செய்துள்ளோம். சாத் பூஜையை எப்படி கொண்டாடுவது என்று தாய்மார்கள் யாரும் கவலைப்படக்கூடாது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியமைப்பார் என்பது தெளிவாகியிருக்கிறது. உங்கள் வாக்குகளின் மூலம் பிஹார் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்படாமல் காப்பாற்றுவீர்கள் என உறுதியாக நம்புகிறன்.

உத்தர பிரதேசத்தில் முன்பு 2 இளவரசர்கள் சேர்ந்து வந்து வாக்கு கேட்டார்கள். (ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்) அந்த மாநிலத்தை கபளீகரம் செய்யலாம் என திட்டமிட்டனர். ஆனால் மக்கள் சரியான பாடம் புகட்டினர். அதுபோலவே பிஹாரில் தற்போது இரண்டு இளவரசர்கள் சேர்ந்துள்ளனர். (ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்) அவர்களில் ஒருவர் காட்டு தர்பாரில் இருந்து வந்தவர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x