Published : 01 Nov 2020 11:24 AM
Last Updated : 01 Nov 2020 11:24 AM
தீபாவளி வருவதை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் புது முயற்சியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாட்டுச் சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி கொண்டாட்டம் இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலி மாவட்டத்தில் மாடுகளை வளர்க்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கவுரி சங்கர் சேவா தளம் என்ற மாட்டுப்பண்ணை தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் அதன் இயக்குநர் ரமேஷ் சர்மா கூறியதாவது:
தொழுவங்களிலிருந்து மாட்டு சாணத்தை அகற்றுவது ஒரு சிக்கலாக உள்ளது, எனவே அவற்றைக்கொண்டு பூந்தொட்டிகள், அகல் விளக்குகள் மற்றும் சிலைகள் போன்ற பல பயனுள்ள பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தோம். அவை சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல, இந்து மதத்தில் புனிதமாகவும் கருதப்படுகின்றன.
அவை அழிக்கப்படும் போது, அவை வீணாக மாறாது, அதற்கு பதிலாக அவை சிதைந்து எருவாகிவிடுகின்றன. நாங்கள் இந்த விளக்குகளை விற்கவில்லை. யார் விரும்புகிறார்களோ அவர்கள் எங்களிடம் வந்து கேட்டுப் பெற்றுச் செல்லலாம். பதிலுக்கு, அவர்கள் விரும்பினால் இங்குள்ள பசுக்களுக்கு தீவனத்தை வழங்கி உதவலாம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT