Published : 31 Oct 2020 07:05 PM
Last Updated : 31 Oct 2020 07:05 PM

சர்தார் பட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு ஆதங்கம்

புதுடெல்லி

தாம் மிகவும் போற்றும் தலைவரான சர்தார் பட்டேலின் கனவை நனவாக்க பாடுபடுமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்தியாவை ஒன்றிணைத்தவரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அவரது பிறந்த நாளான இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தினார்.தாம் மிகவும் போற்றும் தலைவர் சர்தார் பட்டேல் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத் தலைவர், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்ததோடு, மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நவீன இந்தியாவைக் கட்டமைக்க அவர் அளித்த தன்னிகரில்லா பங்களிப்பை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவை ஒன்றிணைத்து சர்தார் பட்டேலை, அவரது சிறந்த இயல்புகளை அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

சர்தார் பட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற தனது அவாவை வெளிப்படுத்திய நாயுடு, இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க தனது திறமை, அனுபவம், திட்டமிடல், பேச்சுத் திறன், செயல்திறன் ஆகியவற்றை பட்டேல் பயன்படுத்தியதாகக் கூறினார்.

நாட்டின் உள்துறை அமைச்சராக சர்தார் பட்டேல் கொண்டு வந்து பேணிக்காத்த உள்நாட்டு நிலைத்தன்மை இரும்பு மனிதர் என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்ததாக நாயுடு மேலும் புகழாரம் சூட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x