Published : 15 Oct 2015 08:55 AM
Last Updated : 15 Oct 2015 08:55 AM

தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: திருப்பதி ரயில் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

திருப்பதி ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாக தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த தால் பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ரயில்கள் மூலம் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

இதனால் திருப்பதி ரயில் நிலையம் பயணிகள், பக்தர்கள் வருகை காரணமாக 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை இரவு 11.30 மணிக்கு போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு ஒரு அழைப்பு வந் துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், திருப்பதி ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும், 8 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கும் நாளில், வெடி குண்டு மிரட்டலா? என போலீஸார் அதிர்ச்சி அடைந்து, 8 மோப்ப நாய்கள், 4 வெடி குண்டு நிபுணர் குழுக்கள் மூலம் இரவு 11.30 மணியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி வரை ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, இது வீண் புரளி என போலீஸார் முடிவு செய்தனர்.

இதற்கிடையே, இந்த தகவலை அறிந்த பயணிகள் பீதி அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை யடுத்து, ரயில் நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x