Published : 30 Oct 2020 12:27 PM
Last Updated : 30 Oct 2020 12:27 PM
சவுதி அரேபியா சமீபத்தில் வெளியிட்ட கரன்சி நோட்டில் காஷ்மீரை இந்தியாவுடன் சேராத தனித்த பகுதியாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்திய இறையாண்மைக்குள்ளான பகுதியை சவுதி அரேபியா, ‘ஒட்டு மொத்தமாக தவறாகச் சித்தரித்துள்ளது’ என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சவுதி அரேபியாவிடம் இந்த விவகாரத்தை இந்தியா எடுத்து சென்றுள்ளது.
“எங்களுடைய சீரியஸான கவலைகளை சவுதி அரேபியாவுக்குத் தெரிவித்துள்ளோம். டெல்லியில் உள்ள சவுதி தூதரிடமும் ரியாத்தில் உள்ள தூதரிடமும் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளோம். ஒருநாட்டின் அதிகாரப்பூர்வ சட்டப்பூர்வ கரண்சி நோட்டில் இன்னொரு நாட்டின் பகுதியை தனித்து காட்டி தப்புப் பிரதிநிதித்துவம் செய்யலாமா? இதனை உடனே மாற்றியமைக்குமாறு சவுதி அரசை வலியுறுத்தியுள்ளோம், ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே” என்றார் ஸ்ரீவஸ்தவா.
அக்டோபர் 24ம் தேதி ஜி20 மாநாடு நடப்பவிருப்பதை முன்னிட்டு 20 ரியால் மதிப்பு கொண்ட நோட்டை சவுதி வெளியிட்டது.
இதில் வரைபடத்தில் காஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தனித்த பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதே கரன்சியில் கில்ஜித் பலுசிஸ்தான், ஆஸாத் காஷ்மீர் ஆகிய பகுதியையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து பாகிஸ்தான் அதிகாரபூர்வ புகார் எழுப்பியதா என்று தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT