Published : 28 Oct 2020 12:06 PM
Last Updated : 28 Oct 2020 12:06 PM
பல பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார். அங்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன.
நிதிஷ் குமாரின் 15 ஆண்டுகால ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கின்றனர், ஆனால் மோடி அவரைத்தான் ஆதரிக்கிறார்.
இந்நிலையில் லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் புதுக்கதை ஒன்றை கிளப்பி விட்டுள்ளார், அதாவது தேர்தல் முடிந்த பிறகு பாஜகவை ஏமாற்றை நிதிஷ் குமார் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்கு ஆதரவளித்து விடுவார் என்ற குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளார்.
இவரது இந்தக் கூற்று நிதிஷ் குமாருக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதை விட பாஜகவுக்குத்தான் அதிக அச்சத்தை ஏற்படுத்தும் என்று பிஹார் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிராக் பாஸ்வான் கூறியதாவது:
நிதிஷ் குமாருக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஹாரை அழித்துவிடும். மேலும் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தையே பலப்படுத்தும். இவர் பாஜக கூட்டணியை விட்டு கழன்று கொள்ள ஆயத்தங்களைச் செய்து விட்டார். ஆர்ஜேடியுடன் சேர தயாராகிவிட்டார். தேர்தலுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை அவர் செயல்படுத்துவார்.
முன்பே கூட அவர் ஆர்ஜேடி ஆசீர்வாதத்தில் அரசு அமைத்துள்ளார்.
பிஹார் 2வது 15 ஆண்டுகால ஆட்சியில் நாறிப்போய்விட்டது. இன்று உங்கள் வாக்குகளினால் பிஹாரி முதலில் என்பதை உருவாக்க வேண்டும் அதே வேளையில் நிதிஷ் இல்லாத பிஹாரை உருவாக்க வேண்டும்.
பாஜக-லோக்ஜனசக்தி ஆட்சி அமையும். மக்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்துங்கள், என்று இந்தி மொழியில் தன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் சிராக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT