Published : 27 Oct 2020 04:33 PM
Last Updated : 27 Oct 2020 04:33 PM
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-இன் கீழ் மேலும் 18 நபர்கள் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையின் கீழ், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ஐ ஆகஸ்ட் 2019-இல் மத்திய அரசு திருத்தியமைத்தது. இதன் மூலம் தனிநபர் ஒருவரை தீவிரவாதியாக அறிவிக்கலாம். இதற்கு முன், அமைப்புகளை மட்டுமே தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்க முடிந்தது.
தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான நாட்டின் உறுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேற்கண்ட சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி செப்டம்பர் 2019-இல் நான்கு நபர்களையும், ஜூலை 2020-இல் ஒன்பது நபர்களையும் தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்தது.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதியையும், தீவிரவாதத்துக்கு எதிரான பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையையும் பறைசாற்றும் விதமாக, கீழ்கண்ட 18 நபர்களை தீவிரவாதிகளாக பிரதமர் நரேந்திர மோடி அரசு இன்று அறிவித்தது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (2019-இல் திருத்தப்பட்ட படி)-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் இந்த சட்டத்தின் நான்காவது பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. அவர்களின் விவரம் வருமாறு:
1. சஜித் மிர் என்கிற சஜித் மஜித் என்கிற இப்ராகிம் ஷா என்கிற வாசி என்கிற காளி என்கிற முகமது வாசிம் (பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தளபதி மற்றும் 26/11 மும்பை தாக்குதலை திட்டமிட்டவர்களில் முக்கிய நபர்களில் ஒருவர்)
2. யூசுப் முசம்மில் என்கிற அகமது பாய் என்கிற யூசுப் முசமில் பட் என்கிற ஹுரேய்ரா பாய் (பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கைகளின் தளபதி மற்றும் 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி)
3. அப்துர் ரெஹ்மான் மக்கி என்கிற அப்துல் ரெஹ்மான் மக்கி (லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபிஸ் சயீத்தின் மைத்துனர், லஷ்கர் இ தொய்பா அரசியல் விவகாரங்கள் தலைவர் மற்றும் லஷ்கர் இ தொய்பா வெளிநாட்டு உறவுகள் தலைவராக செயல்பட்டவர்)
4. சாகித் மெகமூத் என்கிற சாகித் மெகமூத் ரெஹ்மதுல்லா (லஷ்கர் இ தொய்பாவின் முன்கள அமைப்பான பலாஹ்-இ-இன்சனியத் அமைப்பின் துணைத் தலைவர்)
5. பர்ஹதுல்லா கோரி என்கிற அபு சுபியான் என்கிற சர்தார் சாகாப் என்கிற பரு (அக்ஷர்தாம் (2020) மற்றும் ஹைதரபாத் (2005) தாக்குதல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி)
6. அப்துல் ரௌப் அஸ்கர் என்கிற முப்தி என்கிற முப்தி அஸ்கர் என்கிற சாத் பாபா என்கிற மவுலான முப்தி ரௌப் அஸ்கர் (நாடாளுமன்றத்தின் மீது 2001-இல் நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டவர்களில் முக்கியமான நபர், பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் பயிற்சியாளர்)
7. இப்ராகிம் அத்தர் என்கிற அகமது அலி முகமது அலி ஷேக் என்கிற ஜாவித் அம்ஜத் சித்திக் என்கிற ஏ ஏ ஷேக் என்கிற சீப் (1999-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலில் தொடர்புடையவர் மற்றும் 2001 நாடாளுமன்ற தாக்குதலைத் திட்டமிட்டவர்களில் முக்கியமான நபர்)
8. யுசுப் அசார் என்கிற அசார் யூசுப் என்கிற முகமது சலிம் (1999-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி)
9. சாகித் லதிப் என்கிற சோட்டா சாகித் பாய் என்கிற நூர் அல் தின் (பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி, ஜெய்ஷே முகமதின் சியால்கோட் தளபதி)
10. சையது முகமது யூசுப் ஷா என்கிற சையத் சலாவுதீன் என்கிற பீர் சாகேப் என்கிற புஜுர்க் (ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைமை தளபதி)
11. குலாம் நபி கான் என்கிற அமிர் கான் என்கிற சைபுல்லா காலித் என்கிற காலித் சைபுல்லா என்கிற ஜாவாத் என்கிற தாண்ட் (ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் துணை தலைமை தளபதி)
12. ஜாபர் ஹுசைன் பட் என்கிற குர்ஷித் என்கிற முகமது ஜாபர் கான் என்கிற மவுல்வி என்கிற குர்ஷீத் இப்ராகிம் (ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் துணை தலைமை தளபதி)
13. ரியாஸ் இஸ்மாயில் ஷாபந்திரி என்கிற ஷா ரியாஸ் அகமது என்கிற ரியாஸ் பத்கல் என்கிற முகமது ரியாஸ் என்கிற அகமது பாய் என்கிற ரசூல் கான் என்கிற ரோஷன் கான் என்கிற அஜீஸ் (பாகிஸ்தானைச் சேர்ந்த, இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர்)
14. முகமது இக்பால் என்கிற ஷபாந்திரி முகமது இக்பால் என்கிற இக்பால் பத்கல் (பாகிஸ்தானைச் சேர்ந்த, இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இணை நிறுவனர், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர்)
15. ஷேக் ஷகீல் என்கிற சோட்டா ஷகீல் (தாவூத் இப்ரகாமின் கூட்டாளி)
16. முகமது அனிஸ் ஷேக் (1993 மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி)
17. இப்ராகிம் மேமன் என்கிற டைகர் மேமன் என்கிற முஷ்டாக் என்கிற சிக்கந்தர் என்கிற இப்ராகிம் என்கிற அப்துல் ரசாக் மேமன் என்கிற முஸ்தபா என்கிற இஸ்மாயில் (மும்பை குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி)
18. ஜாவேத் சிக்னா என்கிற ஜாவேத் தாவூத் டெய்லர் (1993 மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர், தாவூத் இப்ராகிம் கூட்டாளி, பாகிஸ்தான் தீவிரவாதி)
மேற்கண்ட நபர்கள் பல்வேறு எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டை சீர்குலைக்க இடைவிடாத முயற்சிகளை எடுத்தவர்கள் ஆவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT