Last Updated : 25 Oct, 2020 11:23 AM

1  

Published : 25 Oct 2020 11:23 AM
Last Updated : 25 Oct 2020 11:23 AM

நாட்டின் நிலத்தை ஒரு அங்குலம்கூட எடுக்க ராணுவம் யாரையும் அனுமதிக்காது: ராஜ்நாத் சிங்

இன்று காலை சாஸ்திரா பூஜைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் ராஜ்நாத் சிங் | படம்: ஏஎன்ஐ.

டார்ஜிலிங்

நமது நாட்டின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட இந்திய ராணுவம் யாரையும் எடுக்க அனுமதிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரண்டு நாள் மேற்கு வங்காள மற்றும் சிக்கிம் பயணத்தின் ஒரு பகுதியாக, டார்ஜிலிங்கில் உள்ள சுக்னாவில் உள்ள 33 படைப்பிரிவுகளின் தலைமையகத்தை பார்வையிட்டார். கிழக்கு செக்டர்களில் தற்போதைய சூழ்நிலை மற்றும் தயார் நிலையை ஆய்வு செய்தார்.

இன்று காலை, மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவுச்சின்னத்தில் சாஸ்திரா பூஜை செய்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவணே கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது டாவோர் தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட போர்த்தளவாடங்களை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

சாஸ்திரா பூஜைக்குப் பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊடகங்களிடம் கூறியதாவது:

இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வந்து அமைதி காக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பம். இது நமது குறிக்கோளும்கூட, ஆனால் சில நேரங்களில், தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஆனால், நம்நாட்டின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட எவரையும் எடுக்க எங்கள் ராணுவம் அனுமதிக்காது என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

அண்மையில் லடாக்கில் இந்தோ-சீனா எல்லையில் என்ன நடந்திருந்தாலும், நமது ஜவான்கள் தைரியமாக பதிலடி கொடுத்த விதம், அவர்கள் வீரம் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் லடாக் முதல் வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம் வரை இந்தியாவும் சீனாவும் மோதலில் ஈடுபட்டுள்ளன. பாங்கொங் ஏரி மற்றும் பிற அருகிலுள்ள இடங்களில் உள்ள இந்தியப் பகுதிகளுக்குள் சீன ராணுவம் நுழைந்தது. தனது துருப்புக்களை நகர்த்தி படையெடுக்க முயன்ற சீன ராணுவத்தை எதிர்ப்பதற்காக இந்தியா 60,00 வீரர்களை அனுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x