Published : 25 Oct 2020 06:14 AM
Last Updated : 25 Oct 2020 06:14 AM
பிஹாரின் பக்ஸர் மாவட்டம் அஹிரொலியைச் சேர்ந்தவர் ‘பி.கே’ என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் பாண்டே (42).
தொடக்கத்தில் வெளிநாட்டில் பணியாற்றி வந்த பிரசாந்த், குஜராத்வாசிகள் மூலமாக அம்மாநில முதல்வராக இருந்த மோடிக்கு அறிமுகமானார். இவரது திறமையை உணர்ந்த மோடி கடந்த 2012-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆலோசகராக பணியமர்த்தினார். கிஷோரின் பிரச்சார வியூகங்களால் மீண்டும் முதல்வர் ஆனார்.
அதன் பின்னர் ஐ-பேக் எனும் நிறுவனத்தை கிஷோர்தொடங்கினார். இந்நிறுவனம் சார்பில் நிதிஷ்குமார், காங்கிரஸ்,அர்விந்த் கேஜ்ரிவால், ஜெகன்மோகன்ரெட்டி ஆகியோருக்காக பேரவைத் தேர்தலில் ஆற்றியபணியிலும் வெற்றி கிடைத்தது.
இதனிடையே நிதிஷுடன் மிகவும் நெருக்கமான பிரசாந்த் கிஷோர், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் அவரது கட்சியின் துணைத் தலைவரானார்.
கடந்த ஆண்டு ஜனவரி 29-ல் நிதிஷால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் பிரசாந்த் கிஷோர். இதன் பின்னர், பிஹார் இளைஞர்களை பஞ்சாயத்து தலைவர்களாக்குவதாகக் கூறிய கிஷோர் ‘பாத் பிஹார் கி' (பிஹார் மீதானப் பேச்சு) எனும் பெயரில் தொடங்கிய அரசியல் இயக்கம் பிரபலமானது. இதற்காக சுமார் 9 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், கரோனா பரவல் தொடங்கியதால் பிஹாரில் தலைகாட்டாத கிஷோர், தனது பாட்னா அலுவலகத்தையும் பூட்டி வைத்துள்ளார். எனினும், அவரது ஐ-பேக் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்களான திரிணமூல் காங்கிரஸ், திமுகவுக்காக 2021 பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்கின்றன. ஆனால், தனது சொந்த மாநிலத்தின் பேரவைத் தேர்தலில் ஏனோ, பிரசாந்த் கிஷோருக்கு பங்களிப்பு இல் லாமல் போய் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT