Published : 23 Oct 2020 06:36 PM
Last Updated : 23 Oct 2020 06:36 PM
பிஹார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று கூறியதற்கு பதிலடியாக 19 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜக கூறியதை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அடுத்த 5ஆண்டுகளில் 19 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்வி்ட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், “ ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அறிவித்ததை கிண்டல் செய்துவிட்டு, பிஹாரில் ஆட்சிக்கு வந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதியளித்தது.
10-ம் எண்ணை விட 19 –வது எண் சிறிய எண் என்று எனக்குத் தெரியவி்ல்லை. நான் மீண்டும் ஆரம்பப்பள்ளிக் கூடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறிய வாக்குறுதியை கிண்டல் செய்து, இதெல்லாம் சாத்தியமாகுமா என்று பேசிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தனது தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதியளித்திருந்தது. இதைத்தான் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
மற்றொரு ட்விட்டில் ப.சிதம்பரம் பதிவிட்ட கருத்தில் “ முதன்மை பொருளாதார ஆலோசகர், டாக்டர் சான்யால் ஆகியோர் சக்திகாந்ததாஸ், செபி தலைவர், பொருளாதாரத்துறை செயலாளர் ஆகிய 3 தனித்துவமான ஜென்டின்மேன்களுடன் சேர்ந்து பொருளாதாரத்தைப் பற்றி பேச முயன்றுள்ளார்.
39 பொருளாதார ஆய்வாளர்களில் 34 பேர், அரசு அறிவிக்கும் பொருளாதார ஊக்க அறிவிப்புகள் போதுமான அளவு பொருளாதார வளர்ச்சியை தூண்டாது எனத் தெரிவி்த்துள்ளார்கள். இதை பிரதமர், நிதியமைச்சர் கவனிப்பார்களா” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT