Published : 23 Oct 2020 01:01 PM
Last Updated : 23 Oct 2020 01:01 PM
2 மாதங்களுக்குப்பின் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது. 2 மாதங்களுக்குப் பிறகு (63 நாட்கள்), நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணக்கை, 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நாட்டில் இன்று கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,95,509 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 8.96%. இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்தை (69,48,497) நெருங்குகிறது. குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்கும் உள்ள வித்தியாசம் 62,52,988 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 73,979 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 54,366 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் குணமடைந்தோர் வீதம் 89.53% ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாலும், மத்திய அரசின் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதாலும், இறப்பு வீதம் 1.51% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT