Last Updated : 23 Oct, 2020 07:19 AM

4  

Published : 23 Oct 2020 07:19 AM
Last Updated : 23 Oct 2020 07:19 AM

உ.பி. தொழிலாளர்களுக்கு சலுகைகள்: ஆன்மிக சுற்றுலாவுக்கு ரூ.12,000 உயர்கல்விக்கு ரூ.7,500 நிதியுதவி

புதுடெல்லி

உத்தரபிரதேச தொழிற்சாலை களில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித் துள்ளது.

இதன்படி, சுவாமி விவேகானந்தா வரலாற்று சுற்றுலா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும்தொழிலாளர்களுக்கு ரூ.12,000 அளிக்கப்பட உள்ளது. இதில் தொழிலாளர்கள் ஆன்மிக தலங்கள் மற்றும் வரலாற்றுசிறப்பு மிக்க சுற்றுலாத்தலங் களுக்கு செல்ல அனுமதிக்கப் படுவர். இதை ஐஆர்சிடிசி அல்லது மாநில சுற்றுலாத்துறை மூலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உயர்கல்வி பயிலும் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கும் சலுகை அளிக்கப்பட உள்ளது. மஹாதேவ் வர்மா நூல்கள் வழங்கும் உதவித்திட்டம் என்றழைக்கப்படும் இதில் ரூ.7,500கிடைக்கும்.

விளையாட்டை ஊக்குவிக்க..

மேலும் பள்ளி முதல் உயர்கல்வி வரையில் பயிலும் அனைத்து தொழிலாளர்களின் குழந்தைகளின் விளையாட்டை ஊக்குவிக்கவும் ஒரு சிறப்பு சலுகையை அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகளுக்கான இச்சலுகையில் மாவட்ட அளவில் தேர்வாகும்குழந்தைகளுக்கு ரூ.10,000ஊக்கத் தொகையாக அளிக்கப்படும். இதே தொகை மாநில அளவில் ரூ.25,000, தேசிய விளையாட் டுக்கு ரூ.50,000 மற்றும் சர்வதேச போட்டியாளர்களுக்கு ரூ.1 லட்சமும் ஆண்டுதோறும் கிடைக்க உள்ளது.

இந்த ஊக்கப்பரிசுக்கு உரியவர்களை தேர்வு செய்ய மாவட்டஆட்சியர்கள் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x