Published : 22 Oct 2020 03:34 PM
Last Updated : 22 Oct 2020 03:34 PM
எதிரி டேங்க்குகளை தாக்கி அழிக்கும் என்ஏஜி ஏவுகணையின் இறுதி பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது.
3-ம் தலைமுறை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை (ஏடிஜிஎம்) என்ஏஜி-யின் இறுதி பரிசோதனை பொக்ரான் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த என்ஏஜி ஏவுகணை, நாமிகா என்ற ஏவுகணை செலுத்தும் வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. இலக்கு இடத்தில் நிறுத்தப்பட்ட டாங்கை இந்த என்ஏஜி ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.
பகலில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் எதிரி டாங்குகளை தாக்கி அழிப்பதற்காக , அதி நவீன ஏடிஜிஎம் என்ஏஜி ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. மிக உயரமான இடங்களில் இருந்து எதிரி நாட்டு டேங்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
#WATCH: The successful final trial of Nag anti-tank guided missile conducted earlier today at Pokhran field firing ranges in Rajasthan.
The missile is now ready for induction into the armed forces. pic.twitter.com/lsExIBbefR— ANI (@ANI) October 22, 2020
என்ஏஜி ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்காக, டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT