Published : 22 Oct 2020 09:44 AM
Last Updated : 22 Oct 2020 09:44 AM
மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை பஞ்சாபுக்குப் பிறகு எதிர்க்கும் 2வது காங்கிரஸ் ஆளும் மாநிலமானது ராஜஸ்தான்.
இது தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் திட்டமிட்டுள்ளார்.
மத்தியச் சட்டங்களுக்கு எதிராக மாநில திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்றார் அசோக் கெலோட். மத்திய அரசின் விவசாயச்சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“காங்கிரஸ் கட்சி நம் அன்னதாதாக்களுக்கு ஆதரவாக உறுதியுடன் துணை நிற்கிறது. விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று முதல்வர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதாரவிலையில் கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான விதி செய்ய வேண்டுமென்று அமைச்சர்கள் குழுவும் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒரு சாதாரண சூழ்நிலைகளில் விவசாய விளைபொருள்களை கொள்முதல் செய்வதற்கான வரம்பு புதிய விவசாயச்சட்டத்தில் நீக்கப்படுவதால் விவசாயப் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்பது, பதுக்குவது போன்றவை நடக்கும் விலை அதிகரிக்கும் என்று ராஜஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
தனியார் கொள்முதல்களைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குபடுத்தும் சட்டத்தை நீட்டித்து ராஜஸ்தான் அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.
இன்னொரு ட்வீட்டில் முதல்வர் அசோக் கெலோட், பாஜகவைத் தாக்கும் போது, “கரோனா வைரஸ் நிலவரம் இன்னும் சீரியஸாக இருக்கும்போது சிஏஏ அமலாக்கம் பற்றி பேசி மேலும் பதற்றத்தை அதிகரிக்கப்பார்க்கிறது பாஜக அரசு. நாடு சந்திக்கும் நெருக்கடிகளை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும் சக்திகளை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT