Published : 21 Oct 2020 07:45 PM
Last Updated : 21 Oct 2020 07:45 PM
கேரளாவில் இன்று 8,369 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள மக்கள் - தகவல் தொடர்புத் துறை இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு:
''கேரளாவில் இன்று 8,369 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,839 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். தொடர்பு மூலம் 7,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 883 பேருக்கு நோய்த் தொற்றுக்கான ஆதாரம் தெரியவில்லை.
கரோனாவினால் 26 பேர் இன்று இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர் எண்ணிக்கை 1,232 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் (23), விஜயம்மா (58), ஸ்ரீகாந்தன் நாயர் (57), ஜஸ்டின் ஆல்பின் (68), ஜனார்த்தனன் (70), கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் குட்டி (80), சுதர்சன் பிள்ளை (50), ஷாஜி கோபால் (36), கிளெமென்ட் (69) மற்றும் இஸ்மாயில் சேத் (73), பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பாலன் (69), ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ரோகிணி (62), எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகுனன் (58), ஆல்ஃபிரட் கொரியா (85) மற்றும் டி.கே.ராஜன் (48), பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த உம்மர் (66) மற்றும் நபீசா (67), திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி (75), பாபு லூயிஸ் (52), அபு பக்கர் (49), ஜோஸ் (73), கிருஷ்ணா குமார் (53) மற்றும் வேலாயுதன் (78), கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பருகுட்டியம்மா (93), மாதவி (88) மற்றும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஏ.அப்துல்லா (55) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம் (மாவட்ட வாரியாக) :
எர்ணாகுளம் 1,190, கோழிக்கோடு 1,158, திருச்சூர் 946, ஆலப்புழா 820, கொல்லம் 742, மலப்புரம் 668, திருவனந்தபுரம் 657, கண்ணூர் 566, கோட்டயம் 526, பாலக்காடு 417, பத்தனம்தட்டா 200, இடுக்கி 100.
நோய் கண்டறியப்பட்டவர்களில் 160 பேர் வெளியில் இருந்து கேரளா வந்துள்ளனர்.
உள்நாட்டில் பரவல் மூலம் தொற்று ஏற்பட்டவர்களின் புள்ளிவிவரம்:
எர்ணாகுளம் 926, கோழிக்கோடு 1,106, திருச்சூர் 929, ஆலப்புழா 802, கொல்லம் 737, மலப்புரம் 602, திருவனந்தபுரம் 459, கண்ணூர் 449, கோட்டயம் 487, பாலக்காடு 200, பத்தனம்திட்டா 198, காசர்கோடு 189, வயநாடு 119, இடுக்கி 59.
மாவட்டவாரியாகத் தொற்று பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை:
கண்ணூர் 15, திருவனந்தபுரம் 12, எர்ணாகுளம் 10, கோழிக்கோடு 7, கோட்டயம் மற்றும் திருச்சூர் தலா 6, பத்தனம்திட்டா 3, மலப்புரம் மற்றும் வயநாடு தலா 2 மற்றும் காசர்கோடு 1.
சோதனையில் இன்று தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளின் எண்ணிக்கை:
திருவனந்தபுரம் 705, கொல்லம் 711, பத்தனம்திட்டா 330, ஆலப்புழா 769, கோட்டயம் 404, இடுக்கி 71, எர்ணாகுளம் 970, திருச்சூர் 203, பாலக்காடு 373, மலப்புரம் 832, கோழ்குரம் 832 426, காசர்கோடு 248.
இதுவரை, மாநிலத்தில் கோவிட் நோயில் இருந்து 2,67,082 பேர் மீண்டுள்ளனர், தற்போது 93,425 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 2,80,232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலின் கீழ் 2,57,216 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 23,016 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 62,030 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 40,91,729 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆறு புதிய இடங்கள் இன்று ஹாட்ஸ்பாட்களாக வரையறுக்கப்பட்டன. அதே நேரத்தில் 17 பகுதிகள் விலக்கப்பட்டன. கேரளாவில் இப்போது 617 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT