Published : 20 Oct 2020 11:22 AM
Last Updated : 20 Oct 2020 11:22 AM

கரோனா வைரஸ்: தெற்காசிய நாடுகள் ‘தீவிர எச்சரிக்கையுடன்’ இருப்பது நல்லது, அலட்சியம் வேண்டாம்: உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகச் சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங்.

தெற்காசிய நாடுகளில் சமீபமாக கரோனா தாக்கம் சற்றே குறைந்ததற்காக அந்நாடுகள் ஒரேயடியாக முடக்கத்திலிருந்து வெளியே வந்து ரிலாக்ஸ் ஆகக் கூடாது, இன்னும் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“வைரஸ் பரவலை, தொற்றைத் தடுக்க நம் எதிர்வினை இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும், வேறு வழியில்லை” என்று உலகச் சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் எச்சரித்துள்ளார்.

“சமீப வாரங்களில் கரோனா தொற்று குறைந்து வருவதனால் அலட்சியப் போக்கு கூடாது. இன்றளவும் கூட மற்ற இடங்களைக் காட்டிலும் தெற்காசியாவில் அதிக கரோனா கேஸ்கள் உருவாகி வருவதையே பார்க்கிறோம். பெருந்தொற்றை குறைக்க நம்மால் என்ன கண்டிப்பாகச் செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய்வதுதான் சரி.

நாம் சரியான பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கவில்லை எனில் வரும் தீபாவளி பண்டிகை நாட்கள், வரவிருக்கும் குளிர்காலம் கரோனா பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளஹ்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பவுதிக இடைவெளி, கைக்கிருமி நாசினி, இருமும்போதும் தும்மும்போதும் கட்டுப்பாடு, முகக்கவசப் பழக்கத்தை விட்டுவிடாமல் நீட்டித்தல் ஆகியவை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதிக கூட்டமுள்ள இடங்கள், மூடிய அமைப்புகள், காற்றோட்ட வசதியில்லாத இடங்கள் ஆகியவற்றை தவிர்த்தல் முக்கியம்.

கோவிட் 19 மட்டுமல்ல குளிர்காலங்களில் வரும் ஃப்ளூ காய்ச்சல், உள்ளிட்ட பிற காய்ச்சல்களுக்கும் கரோனா காலத்தில் நாம் கடைப்பிடிக்கும் பவுதிக இடைவெளி, முகக்கவசம், அடிக்கடி கை கழுவுதல், காற்றோட்ட வசதி, இருமலின் போது முகக்கவசம் ஆகியவை கைக்கொடுக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x