Published : 20 Oct 2020 08:00 AM
Last Updated : 20 Oct 2020 08:00 AM

ராணுவ வீரர்களுக்காக அமெரிக்காவிலிருந்து குளிர்கால உடைகளை வாங்கியது இந்தியா

புதுடெல்லி

லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் பதற்றம் நீடிக்கிறது. இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

லடாக் பகுதியில் போர் விமானங்கள் உட்பட போர் தளவாடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 15,000 அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் (-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை) வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் ராணுவ துணைத் தளபதி எஸ்.கே.சைனி சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில், மலைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான குளிர்கால உடைகளை மத்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து அவசரமாக வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குளிர் காலம் தொடங்க உள்ளதால் கூடுதல் வீரர்களை லடாக் மலைப் பகுதியில் பணியில் ஈடுபடுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதே உடைகள் வாங்கியதற்குக் காரணம் என கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தான தளவாட பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இவை வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய உடைகள் இதுவரை ஐரோப்பிய நாடுகளில் இருந்து வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x