Published : 13 Oct 2015 08:32 AM
Last Updated : 13 Oct 2015 08:32 AM
கர்நாடக மாநிலத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை ஆந்திர போலீஸார் பறிமுதல் செய்து அதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதனபல்லியை சேர்ந்த அல்தாஃப் ஹுசைன் என்கிற இரானி அல்தாஃப் (36) என்பவரை மதனபல்லி போலீஸார் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.
இதுகுறித்து சித்தூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப் பாளர் ரத்னா நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: அல்தாஃப் மீது சித்தூர் மாவட்டத்தில் 6 செம்மர கடத்தல் வழக்குகள் நிலு வையில் உள்ளன. இவர், பிரபல கடத்தல்காரரான ஷெரீஃப் என் பவருடன் கூட்டு சேர்ந்து திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும், வெளி நாடுகளுக்கும் கடத்தி விற்று வந்தார். இவரைப் பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டிருந்தது. ஞாயிற்று கிழமை இரவு, இவரை மதனபல்லி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், பல கோடி மதிப்புள்ள செம்மரங் களை கர்நாடக மாநிலம், தொட்ட பலாபூர் தாலுகா, கந்தநூர் பகுதி யில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் போலீஸார் கர்நாடக மாநிலம் சென்று, 3 டன் எடையுள்ள உயர் ரக செம்மரங்களை மீட்டனர். அவை சித்தூர் கொண்டு வரப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 5 கோடி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதே போன்று நேற்று புத்தூர் செக் போஸ்ட் அருகே நடத்திய வாகன சோதனையில் சென்னைக்கு கடத்தப்படவிருந்த 400 கிலோ எடை கொண்ட 12 செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT