Published : 17 Oct 2020 04:41 PM
Last Updated : 17 Oct 2020 04:41 PM
மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளத்தை சமாளிக்க மாநில நீர்வழிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி நிதின்கட்கரி ஆலோசனை கூறி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வெள்ள நிலைமையை சமாளிக்கும் வகையில் மாநில நீர் வழி இணைப்பு திட்டத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி, அந்த மாநில அரசுக்கு மத்திய சாலை போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், குறுசிறுநடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வறட்சி ஏற்படும் இடங்களுக்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும், வெள்ளம் ஏற்படும் சமயங்களில் கிடைக்கும் கூடுதலான தண்ணீரை சேமிக்கவும் முடியும் என்றும் நிதின்கட்கரி கூறி உள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு கடந்த 14-ம் தேதி அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அமைச்சரவை சகாக்களும், கூட்டணி தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பவார் ஆகியோர் மற்றும் மாநில அரசும் இது குறித்து விரைந்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அளவு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் பெரும் பொருள் இழப்பும் ஏற்படுவது தீவிரப் பிரச்னையாக இருப்பதாகவும் உத்தவ் தாக்ரேவின் கவனத்துக்கு கொண்டு வ ந்துள்ளார். வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமான பெரும் பிரச்னைகள் உருவாவதாகவும் கடிதத்தில் கூறி உள்ளார். மனிதர்களால் மேற்கொள்ளப்படும் பிற காரணிகளால் இந்த பிரச்னை தீவிரமாக மாறக்கூடும் என்பதால், இயற்கை பேரழிவை சமாளிக்க விரைவாக திட்டமிட வேஎண்டிய அவசிய தேவை எழுந்திருக்கிறது என்றும் கடிதத்தில் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT