Published : 17 Oct 2020 03:55 PM
Last Updated : 17 Oct 2020 03:55 PM
நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன இவற்றில் பலருக்கும் ஒரு குடும்பம்தான் கட்சி, ஆனால் பாஜகவைப் பொறுத்தவரையில் கட்சிதான் குடும்பம் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் பாஜக அலுவலகத்தை டெல்லியிலிருந்து தொலை மாநாடு மூலம் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
கட்சி அலுவலகம் தலைவரின் வீட்டிலிருந்து நடத்தப்பட்டால் பிறகு அந்தக் கட்சி ஒரு குடும்பத்தின் கட்சிதான். இதை மற்ற கட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.
அங்கெல்லாம் குடும்பமே கட்சி என்பதாகி விடும். ஆனால் பாஜகவைப் பார்த்தீர்கள் என்றால் இங்கு கட்சியே குடும்பம்.
நாட்டில் உள்ள எந்தக் கட்சியையும் உதாரணமாக எடுத்துப் பாருங்கள் அவை குடும்பமாக குறுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸாகட்டும் அல்லது எந்த ஒரு மாநிலக் கட்சிகளாகட்டும் அவர்கள் தங்கள் சகோதரர்கள், சகோதரிகள், தந்தைகள், தாய்கள், மகன்கள் ஆகியோரைக் காப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். உறவினர்களுக்குள் சண்டை இருக்கும்.
ஆனால் உலகின் பெரிய கட்சியான பாஜக ஒரு குடும்பம் போல் ஒன்றிணைந்துள்ளது, என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT