Published : 17 Oct 2020 08:42 AM
Last Updated : 17 Oct 2020 08:42 AM
நீட் தேர்வில் 7.7 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவி அகான்ஷா சிங் ஆகியோர் 720-க்கு720 மதிப்பெண் எடுத்து தேசியஅளவில் முதலிடம் பிடித்துள்ளனர். நீட் தேர்வு வரலாற்றில் இதுவரை எந்த மாணவரும் முழு மதிப்பெண் பெற்றதில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் 8-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்உள்ளிட்ட விவரங்களை என்டிஏஇணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
வரலாற்றில் முதல் முறையாக இருவர் 100% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதையடுத்து டை-பிரேக் கொள்கைகளின் படி சோயப் அப்தாப் சீனியர் மாணவர் என்பதால் அவருக்கு முதலிடம் வழங்கப்பட்டது.
நீட் தேர்வு கடந்த செப்.13-ம் தேதிநடந்தது. தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.14-ம் தேதி மறுதேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுகளை நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் என்டிஏ, நேற்று மாலை வெளியிட்டது. மொத்தம் 7 லட்சத்து 71,500(56.44%) பேர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 99,610 மாணவர்கள் தேர்வெழுதியதில் 57,215 பேர்(57.44 சதவீதம்) தகுதி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 8.87 சதவீதம் அதிகம்.
பொதுப்பிரிவில் எழுதிய மாணவர்களுக்கான கட் ஆஃப் மார்க் 147 இது கடந்த ஆண்டு 134 ஆக இருந்தது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான கட் ஆஃப் மார்க் 129. பிற இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு கட் ஆஃப் மார்க் 113.
மாநிலங்களில் அதிக தேர்ச்சி விகிதத்தில் சண்டிகர், டெல்லியில் 75%-க்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஹரியாணாவில் 73% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்ச்சி விகிதம் 48.6%லிருந்து 57% ஆக அதிகரித்துள்ளது. மாறாக ஆந்திராவில் கடந்த ஆண்டு 71% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 59%க்கும் குறைந்தது.
அனைத்திந்திய ரேங்கிங் பட்டியலில் முதல் 10-ல் 4 பெண்கள். ஆனால் டாப் 50-ல் 13 பேர்தான் பெண்கள். டாப் ரேங்கிங்கில் மாணவிகளை விட மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், மொத்தமாக கலந்தாய்வுக்குத் தகுதி பெற்ற மாணவிகள் 4.3 லட்சமாக இருக்க மாணவர்கள் எண்ணிக்கை 3.4 லட்சமாகவே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT