Published : 15 Oct 2020 08:23 PM
Last Updated : 15 Oct 2020 08:23 PM

இந்தியாவில் உணவு வாயிலாகப் பரவும் நோய்களால் 15 பில்லியன் டாலர் செலவு: ஹர்ஷ வர்த்தன் 

புதுடெல்லி

இந்தியாவில் உணவு வாயிலாகப் பரவும் நோய்களால் தோராயமாக 15 பில்லியன் டாலர் என்ற பெரிய அளவுக்கு பொருளாதார செலவினம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 2050 கண்ணோட்டத்துக்காக ஒட்டு மொத்த அரசு அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கான அமைச்சரவைகளுக்கு இடையேயான சந்திப்புக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தலைமை தாங்கினார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், சரியானதை உண்ணும் இந்தியா இயக்கத்துக்கான 2050 கண்ணோட்டத்தை அடைவதற்கான ஒட்டு மொத்த அரசு அணுகுமுறையை கட்டமைப்பதற்காக பல்வேறு அமைச்சரவைகளின் மூத்த உயர் அதிகாரிகள் மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்புடன் அமைச்சரகங்களுக்கு இடையேயான சந்திப்பை இன்று, தலைமையேற்று நடத்தினார்.

இந்தியாவில் உணவு வாயிலாகப் பரவும் நோய்களால் தோராயமாக 15 பில்லியன் டாலர் என்ற பெரிய அளவுக்கு பொருளாதார செலவினம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டார்.

குழந்தைகள் மத்தியில் உணவை வீணாக்குதல்(21%), எடை குறைவு (36%), வளர்ச்சிக்குறைபாடு (38%) ஆகியவை பொதுவானதாகக் காணப்படுகின்றன. ரத்த சோகையால் 50 % பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆண்கள் மத்தியில் பத்தாண்டுகளில் (2005-15) உடல் பருமனாதல் என்பது 9.3%-த்தில் இருந்து 18.6 % ஆகவும் , பெண்கள் மத்தியில் 12.6%-த்தில் இருந்து 20.7% ஆக அதிகரித்திருக்கும்.

அதே நேரத்தில் தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் இறப்புகளும் அதிகரித்திருக்கின்றன. ஆகவே, யுக்திகள் வகுக்கவும் மற்றும் அதற்கேற்ப செயல்களை ஒருங்கிணைக்கவும் பொதுவான இலக்கை அடைவதற்கான பொதுவான தளத்தை அமைப்பதற்காக அமைச்சரகங்கள் உணவுப் பாதுகாப்பு முதல் நுண்ணூட்டசத்து பாதுகாப்பு வரை இ்ந்த வழியில் இயங்குவதற்கு இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும் என்றும் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x