Published : 13 Oct 2020 08:08 AM
Last Updated : 13 Oct 2020 08:08 AM

2014 தேர்தலின் போது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி எங்கே? விவசாயிகள் பக்கம் துணை நிற்போம்: அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டம்

புதுடெல்லியின் ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக, புதிய விவசாயச் சட்டத்திருத்தங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கலந்து கொண்டு விவசாயச்சட்டங்களைத் திரும்ப பெறும்வரை போராடுவோம் என்றார். மேலும் விவசாயப்பொருட்களுக்கு 100% குறைந்தப்பட்ச ஆதாரவிலை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“விவசாயச்சட்டங்களை திரும்ப பெற்றேயாக வேண்டும், இதில் சமரசத்துக்கு இடமில்லை. 3 சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும். அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதி செய்யும் சட்டம் தேவை.

2014 தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்ட போது சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை பின்பற்றுவதாக வாக்குறுதி அளித்தது. 1.5 மடங்கு அதிகம் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிப்பதாக வாக்குறுதி அளித்தது.

தேர்தல் வெற்றிக்காகக் கூறப்பட்ட வாக்குறுதி வென்ற பிறகு காற்றில் பறக்கவிடப்பட்டது.

6% விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இந்த புள்ளிவிவரம் சரியெனில் மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்.

சிரோமணி அகாலிதளம் பாஜகவுடன் சேர்ந்து நாடகமாடுகிறது. விவசாயச்சட்டங்களை சுக்பீர் சிங் பாதல் எதிர்க்கிறாரா, யாரை ஏமாற்றப்பார்க்கிறார், மக்கள் என்ன முட்டாள்களா?” என்று அரவிந்த் கேஜ்ரிவால் காட்டமாக விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x