Published : 12 Oct 2020 01:43 PM
Last Updated : 12 Oct 2020 01:43 PM
இந்தியாவில் கரோனா நோய் தொற்று உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8,61,853 ஆகவும், இதன் விகிதம் 12.10% ஆகவும் குறைந்துள்ளது.
இந்தியாவில் புதிதாக கரோனா தொற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு நீடிக்கிறது
இந்தியாவில். புதிதாக கரோனா தொற்றுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கு தொடர்ந்து பதிவாகி வருகிறது. புதிதாக நோய் தொற்றுவோரின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்குப் பின்னர் 9 லட்சம் என்ற எண்ணிக்கைக்கு கீழே தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கிறது. இந்த சரிவு தடையின்றி தொடர்கிறது.
நாட்டில் நோய் தொற்றி உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8,61,853 ஆகவும், இதன் விகிதம் வெறும் 12.10% ஆகவும் இருக்கிறது.
இந்தியாவில் நோய்தொற்றில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 61.5 லட்சமாக (61,49,535) உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து இன்றைக்கு 52,87,682 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 71,559 நோயாளிகள் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,732 ஆக இருக்கிறது. தேசிய அளவில் குணம் அடைந்தோர் விகிதம் 86.36 % ஆக முன்னேற்றம் அடைந்துள்ளது.
10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மட்டும் குணம் அடைந்தோரின் விகிதம் 77% ஆக உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் ஒரே நாளில் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 10,000 பேருக்கும் அதிகமாக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 66,732 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மட்டும் 83% அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 10,000-த்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டு தொடர்ந்து அந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அடுத்ததாக கர்நாடகா, கேரளா மாநிலங்கள் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் தலா 9000-த்துக்கும் மேற்பட்டோரைக் கொண்டு உள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நோய் தொற்றிய 816 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மட்டும் 85 % அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் புதிதாக 37% அளவுக்கு (309 பேர்) உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT