Published : 11 Oct 2020 08:29 AM
Last Updated : 11 Oct 2020 08:29 AM
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை சிபிஐ நேற்று விசார ணைக்கு ஏற்றுக்கொண்டது.
உத்தரபிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ளமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் கடந்த மாதம் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத் தியது.
அப்பெண்ணின் சடலத்தை அவரது குடும்பத்தினர் ஒப்புதல் இன்றி போலீஸார் எரித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த விவகாரம் தீவிர அரசியல்பிரச்சினையாகவும் உருவெடுத் தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலர்சந்தித்தனர்.
இந்நிலையில் இவர்களில் பலருக்கும் போலீஸாருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினருக்குசளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனாஅறிகுறிகள் இருப்பதாக கூறப்படு கிறது.
இதுகுறித்த தகவலின் பேரில் மருத்துவக் குழுவினர் அந்த கிராமத்துக்கு விரைந் தனர். எனினும் கரோனா பரி சோதனைக்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
கரோனா சோதனைக்கு மறுப்பு
இதுகுறித்து அங்கு சென்று வந்த மருத்துவர் ஒருவர் கூறும்போது, “அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அக்குடும்பத்தினரை பலர் சந்தித்து வருவதால் கரோனா பரிசோதனை செய்ய நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர்” என்றார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அரசுக்கு கடந்த 3-ம் தேதி பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் அவர் கடிதம் எழுதினார். இந்நிலை யில், ஹாத்ரஸ் வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நேற்று அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ நேற்று முறைப்படி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு விரைவில் விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 பேர் கைது
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உயிரிழக்க காரணமான குற்றத்துக்காக சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங், லவ்குஷ் சிங் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT