Published : 10 Oct 2020 11:22 AM
Last Updated : 10 Oct 2020 11:22 AM
காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் போர்நிறுத்த மீறலைத் தொடங்கியுள்ளது. நேற்றிரவு சர்வதேச எல்லைப் பகுதிகளில் வாழும் பொதுமக்களை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தியது.
சமீப காலமாக எந்தவொரு சம்பவமும் நடைபெறாமல் இருந்த காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான் துருப்புக்கள் ஒரே இரவில் போர்நிறுத்தத்தை மீறியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
போர்நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானுக்கு இந்திய துருப்புக்கள் தகுந்த பதிலடி கொடுத்தன.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை காலை கூறியதாவது:
"அதிகாலை 1:30 மணியளவில், பாகிஸ்தான் போர் நிறுத்த மீறலைத் தொடங்கியது, சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்டார்களால் தீவிரமான ஷெல் தாக்குதல்கள், பூஞ்ச் பகுதியின் மாகோட் துறையில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்தது. இதற்கு இந்திய இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது ” என்று தெரிவித்தார்.
இச்சம்பவங்கள் குறித்து காஷ்மீரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கடுமையான ஷெல் தாக்குதலில் எல்லைப்புற மக்களிடையே மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் ஷெல் தாக்குதல் நிறுத்தப்பட்டது. அதேநேரம் கத்துவா மாவட்டத்தின் ஹிராநகர் துறையில் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானிய ரேஞ்சர்கள் முன்னோக்கிய பகுதிகளை குறிவைத்தனர், அவர்கள் ஐந்து மணி நேரம் இடைவிடாது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சர்வதேச எல்லைப்பகுதியின் பாகிஸ்தான் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 4.40 மணி வரை தொடர்ந்தது. இதற்கு இந்திய தரப்பிலிருந்து எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) கடுமையாக பதிலடி கொடுத்தது.
இதற்கிடையில், பூஞ்ச் மாவட்டத்தின் கஸ்பா செக்டரில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் 40 வயதான ஹமீதா பி என்ற பெண் காயமடைந்தார், எனினும் அவரது உயிருக்கு ஆபதில்லை'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT