Published : 10 Oct 2020 08:45 AM
Last Updated : 10 Oct 2020 08:45 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பத்மநாபசாமி திருக்கோயில். கரோனா வைரஸ் தொற்று காரணமாக 4 மாதங்களாக பக்தர்களுக்காக மூடப்பட்டிருந்த இந்தக் கோயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் கோயில் அர்ச்சகர்கள் 10 பேர் உட்பட 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கோயில் செயல் அதிகாரியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரதீஷன் கூறும்போது, “அர்ச்சகர்கள் 10, ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 15-ம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றை தடுக்க கோயிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. எனினும் 12 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT