Published : 10 Oct 2020 08:43 AM
Last Updated : 10 Oct 2020 08:43 AM

டெல்லியில் காலமான ராம் விலாஸ் பாஸ்வான் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி: சொந்த ஊரில் இன்று அரசு மரியாதையுடன் உடல் தகனம்

மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று முன்தினம் காலமானார். டெல்லியில் உள்ள பாஸ்வானின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார். படம்: பிடிஐ

புதுடெல்லி

லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அமைச்சராக பதவிவகித்த ராம் விலாஸ் பாஸ்வான்,உடல்நலக்குறைவு காரணமாகடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் கடந்த ஆகஸ்ட் மாதம்அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு அவரது உடல்நிலை மேலும் மோசமடைய தொடங்கியது.

இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை யிலேயே அவரது உயிர் பிரிந்தது.அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறுகட்சிகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்தனர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேசியக் கொடி நேற்று அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டெல்லியில் உள்ள பாஸ்வானின் இல்லத்துக்கு நேற்று அதிகாலைஅவரது உடல் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ் சிங் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பாஸ்வானின் உடல், பீஹார் தலைநகர் பாட்னாவில் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x