Published : 08 Oct 2020 08:27 AM
Last Updated : 08 Oct 2020 08:27 AM
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக எந்த விதமான இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 19 ஆண்டுகள் செயல்பட்டு, 20-ம் ஆண்டில் பிரதமர் மோடி 7ம் தேதி அடியெடுத்து வைத்தார். இதற்காக பலதரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த 20 ஆண்டுகால தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தலைவராக மோடி இருந்து வருவதன் அடிப்படையில் அவர் இந்தி மொழியில் தொடர் ட்வீட்களில் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
“எனக்கு நாட்டு நலனும் ஏழைகளின் நலனுமே முக்கியம் என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதிபட கூற விரும்புகிறேன்.
எந்த ஒரு நபரும் தன்னிடம் குறைபாடுகள் இல்லை என்று கூறிக்கொள்ள முடியாது. நீண்ட காலமாக முக்கியமான, பொறுப்புள்ள பதவிகளில் நான் இருந்து கொண்டிருக்கிறேன், ஒரு மனிதனாக நான் கூட தவறுகள் இழைக்கக் கூடியவனே.
என்னிடம் உள்ள குறைபாடுகளையும் மீறி என் மீதான மக்களின் நேயம் அதிகரித்து வருவது என் நல்லதிர்ஷ்டமே.
உங்களது ஆசிகளும் அன்பும் நாட்டுக்கு சேவை செய்யும், ஏழைகளின் நலம் காக்கும், இந்தியாவை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும் உறுதிப்பாட்டை வலுவாக்குகிறது.
சிறு வயது முதலே என் விதைக்கப்பட்ட ஒரு கருத்து என்னவெனில் மக்களே மகேசன், ஜனநாயகத்தில் மக்கள் கடவுள் போன்று சக்திவாய்ந்தவர்கள்.
நீண்டகாலமாக நாட்டு மக்கள் என்னை நம்பி பல முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்துள்ளனர். அவற்றை நிறைவேற்ற நான் உண்மையான அர்ப்பணிப்புள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்” இவ்வாறு மோடி தொடர் ட்வீர்களில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT