Published : 06 Oct 2020 03:10 PM
Last Updated : 06 Oct 2020 03:10 PM
ஒட்டுமொத்த நாட்டையும் மக்களையும் அடித்து வீசுகின்றனர், இதில் என்னை தள்ளியது ஒரு பெரிய விஷயமேயல்ல அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“ஒட்டுமொத்த நாடுமே,மக்களுமே அடித்து வீசப்படுகின்றனர், கீழே தள்ளப்படுகின்றனர். பொதுமக்களையும், விவசாயிகளையும் காப்பது நம் கடமை. இது அந்தமாதிரியான அரசு, நாம் எழுந்து நின்று போராடினால் கீழே தள்ளப்படுவோம், அதுதான் இந்த அரசு. நம்மை தடிகொண்டு அடிப்பார்கள். எதற்கும் தயார்தான்.
என்னைத்தள்ளியது உண்மையான தள்ளல் அல்ல, உண்மையான தள்ளல் எதுவென்றால் ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை செய்கின்றனரே அதுதான் உண்மையான கற்பனை செய்ய முடியாதது. அதனால் தான் அந்தக் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றேன்.
அவர்கள் இந்தப் போராட்டத்தில் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினேன். தினமும் ஏதோ விதங்களில் ஆண்களால் இழிவு அனுபவிக்கும் வன்கொடுமைகளை அனுபவிக்கும் லட்சக்கணக்கான பெண்களின் பக்கம் நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை தெரிவிக்கவே விரும்பினேன்” என்றார் ராகுல் காந்தி.
அன்று ராகுல் காந்தியும் பிரியங்காவும் ஹத்ராஸ் சென்ற போது உ.பி.போலீஸார் இவர்களை கீழே தள்ளினர், கைது செய்தனர். ஆனால் இருவருமே பிறகு பாதிக்கப்பட்டக் குடும்பத்தினரைச் சந்தித்தனர்.
இந்நிலையில் மேலும் மோடி ஆட்சியை விமர்சித்த ராகுல் காந்தி, “இந்திய நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றார் மோடி, ஆனால் எல்லையில் சீனா 1,200 சதுர கிமீ பரப்பளவை ஆக்கிரமித்தனர். சீனா இதை எப்படி செய்ய முடிகிறது எனில், அவர்களுக்குத் தெரியும் மோடி தன் இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளவே முயற்சி செய்வார் என்பது அவர்கள் அறிந்ததே.
இவரது இமேஜைக் காத்துக் கொள்ள 1,200 சதுரகிமீ பரப்பளவை தாரை வார்த்தார். நாட்டுக்கே இது தெரியும் ராணுவ வீரர், ஜெனரல்களுக்கும் இது தெரியும்.
அதே போல் விவசாயச்சட்டங்கள் பற்றி மோடிக்கே தெரியவில்லை என்று நினைக்கிறேன்” என்றார் ராகுல் காந்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT