Published : 06 Oct 2020 08:10 AM
Last Updated : 06 Oct 2020 08:10 AM
பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி 3-வது முறையாக தொடர்கிறது. கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிஹார் பாஜகவினர் அடுத்த முதல்வர் வேட்பாளர் தங்கள் கட்சியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் தலையிட்ட அமித் ஷா, 2020 தேர்தலில் நிதிஷ்குமார்தான் கூட்டணியின் முதல் வர் வேட்பாளர் எனக் கூறிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்தப் பிரச்சினையில் தங்கள் நோக்கத்தை பாஜகவின் தேசியதலைமை தற்போது வேறு வகையில் அரங்கேற்ற முயல்வதாகக் கருதப்படுகிறது. இதற்கான ஆயுதமாக எல்ஜேபியை பயன்படுத்துவ தாகவும் புகார் எழுந்துள்ளது.
பிஹாரில் என்டிஏவின் தலைவராக நிதிஷை ஏற்க முடியாது எனக் கூறிய எல்ஜேபியின் ஆட்சிமன்றக் குழு, 143 இடங்களில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. என்டிஏவின் தேசிய கூட்டணியில் மட்டும் தொடரும் எல்ஜேபி, பிஹாரில் நிதிஷ் கட்சியின் வேட்பாளர்களை மட்டும்எதிர்க்க உள்ளது. இதன்மூலம், தேர்தலுக்கு பின் புதிய கூட்டணியுடன் ஆட்சி அமைக்க பாஜக முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாஜகவின் பிஹார் மாநில நிர்வாகிகள் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "பிஹாரில் நிதிஷுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது இல்லை. எங்கள் ஆதரவில் ஆட்சி அமைத்தஅவர் பிறகு லாலுவை நம்ப வேண்டியதாயிற்று. 2013-ல் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதும் நிதிஷ் எங்களிடம் இருந்து பிரிந்த துரோகத்தை யாரும் மறக்கவில்லை. எனவே பிஹார் தேர்தலின் முடிவுகள் எங்களுக்கே சாதகமாக அமையும்" என்றனர்.
இதனால், தனித்து விடப்படும் நிதிஷ், தேர்தல் முடிவுகளுக்கு பின் பாஜக சொல்வதை கேட்க வேண்டி வரலாம். தனித்து போட்டியிடும் எல்ஜேபி, தலித் வாக்குகளை லாலு கட்சியுடன் சேர்த்து நிதிஷுக்கும் இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
இதேபோன்ற இழப்பு பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் வாக்குகளால் லாலுவிற்கு அதிகமாகவும், நிதிஷுக்கு குறைவாகவும் புதிய 2 கூட்டணிகளால் ஏற்படும் நிலை உள்ளது. இவற்றில் ஒன்று, உ.பி.யின் தலித் தலைவரான மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் மெகாகூட்டணியில் இருந்து வெளியேறிய உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சியுடன் அமைகிறது.மற்றொன்றில் ஹைதராபாத் முஸ்லிம் எம்.பி.அசாதுதீன் ஒவைஸி தலைமையிலான ஏஐஎம்ஐஎம், அகில இந்திய முஸ்லிம் லீக், முன்னாள் எம்.பி.யான பப்பு யாதவ் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ள.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT