Published : 03 Oct 2020 04:14 PM
Last Updated : 03 Oct 2020 04:14 PM
கோவிட்-19 பாதிக்கப்பட்ட சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்கள் படிப்படியாக போட்டிகளுக்கு திரும்புவதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது
விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் உறுதியை மனதில் கொண்டு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் கோவிட்-19 பாதிக்கப்பட்ட சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்கள் படிப்படியாக போட்டிகளுக்கு திரும்புவதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
படிப்படியாக விளையாட்டுக்கு திரும்புதல் என்னும் தலைப்பிலான இந்த வழிகாட்டுதல்களின் கீழ், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் கோவிட்-19 பாதிக்கப்பட்ட வீரர்களின் மேம்பாட்டை கண்காணிக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகளும் மையங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
கோவிட்-19 பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிலையான வழிகாட்டு செயல்முறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
முதல் பிரிவு: கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் அறிகுறிகள் இல்லை.
இரண்டாம் பிரிவு: கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர அறிகுறிகள்.
மூன்றாம் பிரிவு: கோவிட்-19 குணமானதற்கு பின் எழும் சிக்கல்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT