Published : 03 Oct 2020 04:06 PM
Last Updated : 03 Oct 2020 04:06 PM
கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை இன்றைக்கு 54 லட்சத்தைத் தாண்டி உள்ளது.
கரோனா தொற்றில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சர்வதேச தர வரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை இன்றைக்கு 54 லட்சத்தைத் தாண்டி உள்ளது.(54,27,706), இது சர்வதேச அளவில் குணம் அடைந்தோரின் விகிதத்தில் 21 % ஆகும். மொத்த பாதிக்கப்பட்டோரின் பங்கில் 18.6 % இந்தியாவின் விகிதம் இருக்கிறது.
இதர நாடுகளுடன் ஒப்பிடும் போது, குறைந்த அளவு உயிரிழப்பு விகிதம் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவும் ஒரு நாடாக தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. உலக அளவில் உயிரிழப்போர் விகிதம் இன்றைய தேதிப்படி 2.97%- ஆக இருக்கிறது. இதனோடு ஒப்பிடும் போது இந்தியாவின் விகிதம் 1.56% ஆக இருக்கிறது.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் இறப்பு எண்ணிக்கை என்ற விகிதத்திலும் உலக அளவில் குறைவான எண்ணிக்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. உலக சராசரி என்பது ஒரு மில்லியனுக்கு 130 பேர் உயிரிழப்பதாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 73 பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 75,628 பேர் குணம் அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தினமும் குணம் அடைவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் குணம் அடைவோர் விகிதம் காரணமாக தேசிய குணம் அடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து இப்போது 83.84 % ஆக இருக்கிறது. 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 73.36 % அளவுக்கு குணம் அடைந்தோர் விகிதம் இருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. அந்த மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் அதிக அளவு குணமடைந்தோரின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT