Published : 03 Oct 2020 08:19 AM
Last Updated : 03 Oct 2020 08:19 AM

கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்திலும் செப்டம்பர் ஜிஎஸ்டி வசூல் ரூ.95,480 கோடி

புதுடெல்லி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.95,480 கோடி வசூலாகியுள்ளது. இது பொருளாதாரம் மீட்சியடைவதை உணர்த்துவதாக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2020 வசூலானதைக் காட்டிலும் 3 மடங்கு (4 சதவீதம்) அதிகமாக வசூலாகி உள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி ரூ.17,741 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.23,131 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,484 கோடியும் வசூலாகியுள்ளது. இறக்குமதி மூலமான வரி ரூ.22,442 கோடியும், செஸ் ரூ.7,124 கோடியும் (ஒருங்கிணைந்த ரூ.788 கோடியும்) வசூலாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ.86,449 கோடி, ஜூலை மாதம் ரூ.87,422 கோடி, ஜூன் மாதம் ரூ.90,917 கோடி, மே மாதம் ரூ.62,151 கோடி, ஏப்ரல் மாதம் ரூ. 32,172 கோடியும் வசூலாகியுள்ளது.

மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது மே மாதம் முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டது. தற்போதைய சூழலில் வரி வசூல் நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் வசூல் அதிகமாகும் என வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x