Published : 02 Oct 2020 01:52 PM
Last Updated : 02 Oct 2020 01:52 PM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இதுவரை அமெரிக்காவில் 74 லட்சத்து 94 ஆயிர்தது 671 பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து660 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.
அமெரிக்காவில் தீவிரமாக கரோனா வைரஸ் பரவிய நேரத்தில் கூட முகக்கவசம் அணியாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலம் வந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதிபர் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் தனக்கும், தனது மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அவர் பதிவிட்ட கருத்தில் “ எனக்கும், எனது மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களின் தனிமைப்படுத்தும் பணியைத் தொடங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் ‘‘எனது நண்பர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா விரைவில் குணமடையவும் நல்ல உடல் ஆரோக்கியம் பெறவும் எனது வாழ்த்துகள்.’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT