Published : 02 Oct 2020 12:14 PM
Last Updated : 02 Oct 2020 12:14 PM
பாஜக புதிய தேசிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 6-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. பி.எல்.சந்தோஷ் தொடர்ந்து அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். வி சதீஷ், சவுதன் சிங் மற்றும் சிவ் பிரகாஷ் ஆகியோர் தொடர்ந்து தேசிய இணை செயலாளர்களாக உள்ளனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் அகர்வால், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதிர் குப்தா துணை பொருளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமித் மால்வியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இளைஞரணி தலைவராக இருந்த பூணம் மகாஜன் நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் ராமன் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராம் மாதவ், முரளிதரராவ், சரோஜ் பாண்டே, அனில் ஜெய்ன் விடுவிக்கப்பட்டு புதுமுகங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
துஷ்யந்த் குமார் கவுதம், டி.புரந்தரேஷ்வரி, சி.டி.ரவி, தருண் சுக், திலிப் சைகியா ஆகியோர் பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய இளைஞரணித் தலைவராக பூனம் மகாஜனுக்குப் பதிலாக தேஜஸ்வி சூரியா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொருளாளராக ராஜேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பாஜக புதிய தேசிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 6-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். டெல்லயில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பிஹார் உட்டபட அடுத்தடுத்து வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT