Published : 01 Oct 2020 08:06 PM
Last Updated : 01 Oct 2020 08:06 PM

கரோனா காலத்திலும் ரயில் சரக்கு போக்குவரத்தில் சாதனை; கடந்த ஆண்டை விட அதிகம்

புதுடெல்லி

சரக்கு போக்குவரத்தின் மூலம் ரூ 9896.86 கோடியை செப்டம்பர் 2020-இல் ரயில்வே ஈட்டியுள்ளது, கடந்த வருடத்தை காட்டிலும் ரூ 1180.57 கோடி அதிகம்

குறிப்பிடும்படியான சாதனையாக, ரூ 9896.86 கோடியை சரக்கு போக்குவரத்தின் மூலம் இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது, கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ 8716.29-ஐ காட்டிலும் இது ரூ 1180.57 கோடியும் 13.54 சதவீதமும் அதிகம் ஆகும்.

சரக்கின் அளவுகளை பொருத்தவரை கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 15.3 சதவீதம் அதிகம் ஆகும். இதன் மூலம், சரக்கின் அளவு மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளது தெளிவாகிறது.

மண்டல அளவில் வர்த்தக வளர்ச்சி பிரிவுகள், சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக ரயில்கள் மற்றும் விவசாயிகள் ரயில்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலமும் முழுமையான கண்காணிப்பின் மூலமும் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.

ரயில்வே சரக்கு போக்குவரத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்குவதற்காக பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் இந்திய ரயில்வேயால் வழங்கப்படுகின்றன. கோவிட்-19-ஐ வாய்ப்பாக பயன்படுத்தி அனைத்து விதங்களிலும் ரயில்வே மேம்பாடு கண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x