Last Updated : 30 Sep, 2020 09:14 AM

1  

Published : 30 Sep 2020 09:14 AM
Last Updated : 30 Sep 2020 09:14 AM

நாள்தோறும் சராசரியாக 87 பலாத்காரம்: 2019-ல் பெண்களுக்கு எதிரான குற்றம் 7 சதவீதம் அதிகரி்ப்பு: என்சிஆர்பி தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2018-ம் ஆண்டைவிட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி)தெரிவித்துள்ளது.

2019-ல் பெண்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 குற்றங்கள் நடந்துள்ளன. சராசரியாக நாள்தோறும் 87 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. இதில் 2019-ல் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் மட்டும் 32 ஆயிரத்து 33 நடந்துள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 78 ஆயிரத்து 236 குற்றங்கள் நடந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 2018-ம் ஆண்டைவிட 2019-ல் 7.3 சதவீதம் குற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த 2018-ல் 33 ஆயிரத்து 356 பலாத்கார சம்பவங்கள் பதிவாகின, 2017-ல் 32,ஆயிரத்து 559 பலாத்கார சம்பவங்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டில் பெரும்பாலான குற்றங்கள் கணவரால் கொடுமை, உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவில் 30.9 சதவீதக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான தாக்குதல் மூலம் 21.8 சதவீத வழக்குகளும், பெண்களைக் கடத்துதல் தொடர்பாக 17.9 சதவீத வழக்குகளும் பதிவாகியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு குற்ற விகிதம் 62.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2018-ல் 58.8 சதவீதமாகவே இருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் கடந்த 2019-ல் அதிகரித்துள்ளன. கடந்த 2018-ல் குழந்தைகளுக்கு எதிராக பதிவான குற்றங்களைவிட 2019-ல் 4.5 சதவீதம் குற்றம் பதிவானது. 2019-ல் குழந்தைகளுக்கு எதிராக 1.48 லட்சம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 35.3 சதவீதம் பாலியல்வன்முறை குற்றங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x