Published : 30 Sep 2020 08:22 AM
Last Updated : 30 Sep 2020 08:22 AM
கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் பார்மா நிறுவனம் கோ வேக்ஸின் என்ற மருந்தை தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்துக்கு நேற்று சென்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மருந்து தயாரிப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள நிபுணர்களிடம் கோ வேக்ஸின் தடுப்பு மருந்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க நமது நிபுணர் குழு இரவும் பகலுமாக உழைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல, கரோனாவுக்கான தடுப்பு மருந்தை நம் நாட்டைச் சேர்ந்த நிபுணர்களே கண்டுபிடித்து நமக்கு வழங்கி விடுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவும் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே நமக்கு கரோனா தடுப்பு மருத்து புழக்கத்துக்கு வந்துவிடும் என நம்புகிறேன். இதற்காக உழைக்கும் மருத்துவ நிபுணர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT