Published : 28 Sep 2020 12:39 PM
Last Updated : 28 Sep 2020 12:39 PM
சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்த நாளன்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய விடுதலை போராட்ட மாவீரன் பகத் சிங்கின், 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.
मां भारती के वीर सपूत अमर शहीद भगत सिंह की जयंती पर उन्हें कोटि-कोटि नमन। वीरता और पराक्रम की उनकी गाथा देशवासियों को युगों-युगों तक प्रेरित करती रहेगी। pic.twitter.com/LMy2Mlpkol
— Narendra Modi (@narendramodi) September 28, 2020
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"பாரத மாதாவின் தவப்புதல்வரான அமரர் பகத் சிங்கின் பிறந்த நாளன்று அவருக்கு கோடானு கோடி அஞ்சலிகள். வீரம் மற்றும் துணிச்சலின் எடுத்துக்காட்டான அவரது வரலாறு நாட்டு மக்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும்," என்று பிரதமர் கூறினார்.
அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ஷாஹீது பகத் சிங் எப்போதுமே இந்தியர்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவே இருப்பார். தனது புரட்சிகர சிந்தனைகள், தியாகத்தின் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய பாதையை உருவாக்கிய பகத் சிங்கிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எப்போதும் நமக்கு உத்வேகம் அளிப்பவராகவே இருப்பார்’ என கூறி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT