Last Updated : 03 Sep, 2015 08:44 AM

 

Published : 03 Sep 2015 08:44 AM
Last Updated : 03 Sep 2015 08:44 AM

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பாடு: மேற்கு வங்கம் உட்பட 13 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை

சிரியா மற்றும் இராக்கில் பெரும் நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட்) தீவிரவாதிகள், இந்தியாவில் ஆள்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக் கையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில், டெல்லி, மேற்கு வங்கம், உ.பி., ராஜஸ்தான் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர்களின் கூட் டத்தை மத்திய உள்துறை அமைச்ச கம் டெல்லியில் சமீபத்தில் நடத்தியது.

இக்கூட்டத்தில், மத்திய கிழக் காசியாவில் மிகப்பெரிய தீவிர வாத அமைப்பாக செயல்பட்டு வரும் ஐ.எஸ்., இந்தியாவில் தாக்கு தல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், இதற்காக இங்கேயே ஆட்களை தேர்வுசெய்ய திட்டமிட்டுள்ளதாக வும் உள்துறை அமைச்சகம் தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருந் தது. இதன் மீது 13 மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர் களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஊடுருவ எல் லைப்புற மாவட்டங்களை ஐ.எஸ். தேர்ந்தெடுத்திருப்பதால், குறிப் பாக வங்கதேசத்துடன் எல்லையை கொண்டுள்ள மேற்குவங்க மாநிலம் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து `தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “பிரிட்டன் - இந்தியா இடையி லான தீவிரவாத தடுப்பு கூட்டுப் பயிற்சி முகாம் கடந்த ஜனவரியில் லண்டனில் நடந்தது. அதில், ஐ.எஸ். தங்கள் பகுதிக்கு வெளியே இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக பிரிட்டன் எச்சரித்திருந்தது. பிரிட்டனின் இந்த எச்சரிக்கைக்கு பிறகு ஐஎஸ் நடவடிக்கைகளை கண்காணிக்கு மாறு மத்திய உளவுத்துறை அமைப்புகளும் முடுக்கி விடப்பட் டுள்ளன. இதைத்தொடர்ந்து அவர் கள் அளித்த தகவல் அடிப்படை யில் நாட்டின் 13 மாநிலங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன” என்றனர்.

இதில் குறிப்பாக மேற்கு வங்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் கவனத்துடன் எச்சரிப்பதற்கு அதன் எல்லைப் பகுதிகளில் சமீப காலமாக அதி கரித்துள்ள தீவிரவாத நடவடிக் கைகளே காரணம். இம்மாநில எல்லைப்பகுதி கிராமங்களின் சுவர்களில் `ஜிகாத்’ எனும் பெயரில் எழுதப்படும் வாசகங்களால் பல இளைஞர்கள் தீவிரவாத நட வடிக்கையில் ஆர்வம் காட்டுவ தாகக் கூறப்படுகிறது. இந்த இளைஞர்களை குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது.

இதற்கு ஆதாரமாக, ஐஎஸ் அமைப்பினருக்கு ஆதரவு திரட்டிய புகாரில் முகம்மது மெஹந்தி என்ற 26 வயது மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட மெஹந்தி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பாக மேற்கு வங்க எல்லையில் அமைந்துள்ள பர்து வானின் ஒரு வீட்டில் வைக்கப் பட்டிருந்த குண்டு வெடித்து இருவர் உயிர் இழந்தனர்.

இந்நிலையில் ஐஎஸ் அமைப் பின் பெரும்பாலான ஆதரவாளர் கள் நன்கு படித்தவர்களாக உலகம் முழுவதும் இருப்பதால், சமூக இணையதளங்களிலும் தீவிர கவனம் செலுத்தும்படி 13 மாநிலங்களையும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x