Published : 26 Sep 2020 07:42 PM
Last Updated : 26 Sep 2020 07:42 PM
ஐ.நா. பொதுசபையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற்றது. அதாவது உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையை முன்கூட்டியே விடியோவில் பதிவிட்டு அனுப்பி, அதனை கூட்டத்தின் போது ஒளிபரப்பும் வகையில் நடத்தப்பட உள்ளது.
பொதுக் கூட்டத்தின் நிகழ்ச்சிப்படி சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது எத்தனை நாட்களுக்குத்தான் ஐநாவின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து இந்தியா தள்ளியே இருக்கும்? குறிப்பாக இந்தியாவில் பல மாற்றங்களைச் செய்து வரும் நேரத்தில் அது உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் எத்தனைக் காலம்தான் காத்திருப்பது? என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
காலத்திற்கேற்ப ஐ.நா.,சபையும் மாற வேண்டிய நிலை வந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் ஐ,நா., பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஐ.நா சபை நிறுவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் பெருமை கொள்கிறது. நமது தேவைகளும் சவால்களும் இன்று புதியவையாக உள்ளன. 130 கோடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் பேசுகிறேன்.
உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது. ஐ.நா சபை சீர்திருத்தங்களுக்காக இந்தியா எவ்வளவு நாள் காத்து கொண்டிருப்பது. கொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.சபையின் நாடுகளின் பங்கு என்ன ? கொரோனாவை எதிர்கொள்ள உலகளாவிய ஒற்றுமை தேவை. கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா மூன்றாம் கட்டத்தில் உள்ளது. கொரோனாவால் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தனது கடமையை சிறப்பாக செய்துவருகிறது. மனித குலத்திற்கு எதிரான செயல்களை கண்டிக்க இந்தியா ஒரு போதும் தயங்கியதில்லை. சுயநலம் கருதாது மனித வள மேம்பாட்டிற்காக இந்தியா பாடுபடுகிறது. உலக அளவில் அமைதியை நிலைநாட்ட அதிக உயிர்தியாகம் செய்தது இந்தியா தான். அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை அளிப்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. பெண்களுக்கான பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அறிவித்துள்ளது. உலகளவிய கொள்கைக்குஇந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.
இன்று, இந்திய மக்கள் ஐ.நா சீர்த்திருத்த நடைமுறைஅக்ள் அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு எப்போது வரும் என்று கவலையடைந்துள்ளனர். உலக அமைப்புகளில் இந்திர்களின் பங்களிப்பை இன்று ஒவ்வொரு இந்தியரும் கூர்ந்து அவதானித்து வருகின்றனர். ஐநாவில் இந்தியாவின் விரிவாக்கமான பங்குக்காக இந்தியா விரும்புகிறது.
நாம் வலுவாக இருக்கும் போது உலகிற்கு நாம் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம். ஆனால் பலவீனமாகும் போது நாம் உலகிற்குச் சுமையாகி விடுவோம்.
1945-ம் ஆண்டு கால உலகத்தை விட இன்றைய உலகம் வேறு பட்டது. முற்றிலும் வேறுபட்டது, ஆதாரங்கள், பிரச்சினைகள் தீர்வுகள் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவை. எனவே மாறும் காலங்களில் நாமும் மாறவில்லை எனில் மாற்றங்களைக் கொண்டு வரும் உந்துதலும் பலவீனமாகவே போய் விடும்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியாவும் தன் பொறுப்பை நிறைவேற்றும். இந்தியா மீது இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் என் நன்றிகள்.
உலகின் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடாக, நாங்கள் எங்களது வளமையான அனுபவங்களை உலக நன்மைக்காக கொண்டு வருவோம்.
ஐநாவிலும் இந்தியா உலகம் முழுதுற்குமான ஷேம நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. இந்தியாவின் அனுபவங்கள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் அதன் உயர்வு தாழ்வுகளுடன் உலக நன்மையை வலுப்படுத்துவதே.
மாற்றமடைந்த சூழ்நிலைகளில், பெருந்தொற்றுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் நாம் தற்சார்பு இந்திய என்பதை நோக்கி முன்னேறி வருகிறோம். அதுவும் உலகப் பொருளாதாரத்துக்கான இரட்டிப்பாக்க வலிமையைத் தரும்.
முன்னேற்றப்பாதையில் இந்தியா உலக நாடுகளிடமிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறது. எங்கள் அனுபவத்தையும் உலகிடம் பகிர விரும்புகிறது.
இவ்வாறு மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT