Published : 26 Sep 2020 11:54 AM
Last Updated : 26 Sep 2020 11:54 AM
மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவசாய மசோதாக்களை நிறைவேற்றியதிலிருந்து பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
எதிர்க்கட்சிகள் கடுமையாக மசோதாக்களை எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் நரேந்திர மோடி அரசு விவசாயிகளைச் சுரண்ட வழிவகை செய்கிறது என்று சாடிய ராகுல் காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக் குரல் கொடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
சமூக ஊடகத்தில் காங்கிரஸ் ‘விவசாயிகளுக்காக பேசுங்கள்’ (‘Speak up for farmers’) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றிய 3 மசோதாக்கள் குடியரசுத் தலைவர் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி ட்விட்டரில், “விவசாயிகளை மோடி அரசு சுரண்டுவதற்கு எதிராக நாம் நம் குரல்களை ஒருங்கிணைந்து எழுப்புவோம்” என்று இந்தி மொழியில்
மேலும் விவசாய மசோதாக்களை திரும்ப பெறும் வலியுறுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘விவசாயிகளுக்காக குரல் கொடுப்போம் பிரச்சாரத்தில் இனையுங்கள்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், விவசாய மசோதக்களை ஜனநாயகவிரோத முறையில் அரசு நிறைவேற்றியது என்றும் இது விவசாயிகள் மீதான தாக்குதல் என்றும், நாட்டின் உயிர்நாடியான வேளாண்மையை தங்களது முதலாளி நண்பர்களுக்கான வருவாய் ஓட்டமாக மாற்றியுள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளது.
மற்ற கட்சிகளும் இந்த விவசாய மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக கார்ப்பரேட்களை ஆதரிப்பதாகும் என்று எதிர்த்து வருகின்றன.
ஆனால் இந்த மசோதாக்கல் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT