Published : 26 Sep 2020 10:08 AM
Last Updated : 26 Sep 2020 10:08 AM
மன்மோகன் சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாதை இந்தியா உணர்கிறது என்று ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
சனிக்கிழமையான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 88 வது பிறந்த தினமாகும்.
இந்நிலையில் ராகுல் காந்தி தன் வாழ்த்துச் செய்தியில், “டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஆழமான பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது. அவரது நேர்மை, நயநாகரீகம், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நம் அனைவருக்குமே அகத்தூண்டுதலாக அமைவது” என்று புகழாரம் சூட்டிய ராகுல் காந்தி.
‘HappyBirthdayDrMMSingh’ என்ற ஹேஷ்டேக்குடன் அவருக்கு ‘பிறந்த தின வாழ்த்துக்கள், அருமையான ஆண்டு உங்கள் முன்னால் இருக்கிறது’ என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு இந்தியரின் ஒட்டுமொத்த நலவாழ்வுக்காகப் பாடுபட்ட டாக்டர் மன்மோக்சன் சிங்கின் அர்ப்பணிப்பை நாம் இன்று கொண்டாடுவோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
இன்னொரு ட்வீட்டில் காங்கிரஸ் கட்சி, “திறமை மிக்க உலகத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் தொலை நோக்குப் பார்வை நம்நாடு குறித்த சமரசமற்ற சிந்தனை கொண்டது. இந்தியாவை அதன் உயரங்களிலும் தாழ்விலும் வழிநடத்திச் சென்ற இந்தியாவின் மிகப்பெரிய மகனுக்கு இந்தியா எப்போதும் கடன் பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT