Published : 23 Sep 2020 08:57 AM
Last Updated : 23 Sep 2020 08:57 AM
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையேயும், விவசாயப் போராட்டங்களுக்கு இடையேயும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதக்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கச் சார்பு அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் தெரிவித்துள்ளது.
இந்த மசோதாக்கள் நோக்கத்தில் குற்றமில்லை. ஆனால் சில மாற்றங்களைச் செய்து இந்திய விவசாயிகளைக் காப்பது அவசியம் என்று கூறுகிறது இந்த அமைப்பு.
இது தொடர்பாக சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஷ்வனி மகாஜன், தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குக் கூறும்போது, “சில பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையைக் கணக்கிடுவதற்கு, இடுசெலவுடன் 50% கூடுதலாகச் சேர்த்து விவசாயிகளிடமிருந்து அரசுக் கொள்முதல் செய்ய வேண்டும், இதையே மண்டிகளிலும் அமல்படுத்த வேண்டும்.
கார்ப்பரேட்டுகள் மண்டியில் அல்லாமல் வெளியிலிருந்தும் கொள்முதல் செய்யலாம் என்பதை அனுமதிக்கும் போது அவர்கள் ஏன் இந்த அதிகரிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யக் கூடாது. இதற்குத்தான் அரசு இன்னொரு மசோதா கோண்டு வர வேண்டும் என்று கூறுகிறோம். அல்லது இப்போது நிறைவேற்றிய மசோதாவைத் திருத்தம் செய்ய வேண்டும்.
மேலும் குறைத்தீர்ப்பு அமைப்பாக சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் செயல்படும் என்கிறார்கள். இதனால் சாதாரணம் விவசாயிகள் பயன்பெற முடியாது. ஏற்கெனவே சுமை நிறைந்த சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் வசம் இன்னும் ஏன் சுமையை ஏற்ற வேண்டும். குறைத்தீர்ப்பாயமாக வேளாண் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
அதே போல் விவசாயிகள் யார் என்பதற்கான விளக்கங்களில் கார்ப்பரேட்கள் நீக்கப்பட வேண்டும். விவசாயிகள் மட்டுமே விவசாயிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதே போல் விவசாயிகளிடத்தில் எங்கு கொள்முதல் செய்யப்படுகிறதோ அங்கேயே அவர்களுக்குரிய தொகையை கொடுக்க வேண்டும், கொள்முதல் செய்து விட்டு அவர்களை தொகைக்காக காத்திருக்கச் செய்தல் கூடாது.” என்று சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT