Published : 21 Sep 2020 10:51 AM
Last Updated : 21 Sep 2020 10:51 AM
மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் 25க்கும் அதிகமானோர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
4 வயது சிறுவன் உட்பட 11 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 43 ஆண்டுகால பழைய ஜிலானி கட்டிடம் இன்று அதிகாலை 3.40 மணிக்கு இடிந்து விழுந்தது. இதில் பலியான 7 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 2 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டடத்தில் 40 பிளாட்கள் இருந்தன. சுமார் 150 பேர் வசித்து வந்தனர். சம்பவம் அதிகாலை நடந்தது என்பதால் அதில் வசித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர்.
தானேயிலிருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள பிவாண்டியில் பவர்லூம்கள் அதிகம்.
தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்தன.
கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து உள்ளூர் மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதவி புரிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பிரதமர் இரங்கல்:
இந்தத் துயரச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தன் இரங்கலை தெரிவித்துள்ளார், “பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது. உயிர்களை இழந்து வாடும் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனர், பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
என்று தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT