Published : 21 Sep 2020 10:07 AM
Last Updated : 21 Sep 2020 10:07 AM

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட்; துணைத்தலைவருக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பாஜக பரிசீலித்தது, இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற விவகார அமைச்சர் வி.முரளிதரன் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார்

இதனையடுத்து திரிணமூல் எம்.பி. டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதாவ், சிபிஎம் கட்சியின் கே.கே.ராகேஷ், காங்கிரஸ் எம்.பி.க்கள் சையத் நாசர் ஹுசைன், ரிபுன் போரா, ஏ.ஐ.டி.சியின் டோலா சென், சிபிஎம் கட்சியின் இளமாறம் கரீம் ஆகியோர் ஒருவாரத்துக்கு அவை நிகழ்ச்சிகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர். ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.

காரணம் அவைத் துணைத்தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முறையான வடிவத்தில் இல்லை என்றும் இதற்கு 14 நாள் நோட்டீஸ் அளிப்பது அவசியம் என்றும் எனவே இந்தத் தீர்மானத்தை நிராகரிக்கிறேன் என்று வெங்கய்ய நாயுடு மறுத்து விட்டார்.

மேலும் ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சிகள், எதிர்ப்புகள் தன்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது என்று கூறிய அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றத்தின் பெருமையைக் குலைத்து விட்டனர், துணைத்தலைவரை அச்சுறுத்துகின்றனர். என்று தெரிவித்தார்.

விவசாய மசோதக்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் நாட்டின் உணவுத்தொழிலை ஒப்படைக்கும் செயல் என்று கடும் விமர்சனங்களும், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குறைந்தப் பட்ச ஆதாரவிலைக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாது என்று பிரதமர் மோடி உட்பட ஆளும் கட்சிகள் கூற, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த பட்ச ஆதாரவிலையை அகற்றுவதுதான் இந்த மசோதாக்களின் நோக்கம் என்று நிபுணர்களும் எதிர்க்கட்சியினரும் சாடி வருகின்றனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்தனர் இதை ஏற்க முடியாது என்று வெங்கய்ய நாயுடு மறுத்து விட்டார்.

இந்நிலையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் ஒருவாரம் தடைசெய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x